30 பேரின் கால்களுக்கிடையே ஸ்கேட்டிங் செய்து கின்னஸ் சாதனை புரிந்த நாய் (video)

பெரு நாட்டைச் சேர்ந்த ஒட்டோ என்ற நான்கு வயது புல் டாக், இந்நாட்டின் தலைநகரான லிமாவின் முப்பது பேரின் கால்களுக்கிடையே ஸ்கேட்டிங் செய்தவாறு புகுந்துவந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

நேற்று முன்தினம் இந்த சாதனையைப் படைத்த ஒட்டோவின் ஸ்கேட்டிங் வீடியோ கின்னஸ் நிறுவனம் மூலமாக யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் உயிரிழந்துப்போன டில்மேன் என்ற அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்யும் நாயின் சாதனையை ஒட்டோ தற்போது முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.