அஜித்தை புகழ்ந்து தள்ளிய குஷ்பு

அஜித்தை புகழ்ந்து தள்ளிய குஷ்பு

அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வேதாளம்’. தீபாவளியன்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் படத்தை பார்த்த குஷ்பு, அஜித்தை பாராட்டி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘வேதாளம்’ படம் சூப்பர் ஹிட். சிறந்த பொழுது போக்கு படம். இயக்குனர் சிறுத்தை சிவா சிறப்பாக இயக்கியிருக்கிறார். லட்சுமி மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார். தல அஜித் மீண்டும் மாஸ் காட்டியுள்ளார். தல நீ செம்ம ஸ்டைல், நீ கெட்டவன் ஆனா அன்பானவன். தல உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம்’ என்றார்.

வேதாளம் படத்தில் அஜித்துடன் லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன், தம்பிராமையா, சூரி, கோவை சரளா, அஸ்வின், கபீர் சிங், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.