காண்டம் சாலஞ் -(ஆணுறை சவால்) -ரெண்டிங் கேம்

தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சேலஞ்ச் என்ற பெயரில் ஒரு கேம், பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இணையதளம் மூலமாக இது பல நாடுகளுக்கும் பரவுகிறது.

கிளுகிளுப்பு

இந்த ஆட்டத்தின் பெயர், ‘காண்டம் சேலஞ்ச்’. தமிழில் சொல்ல வேண்டுமெனில், ‘ஆணுறை சவால்’. அது என்ன ஆணுறை சவால்.. ஆணுறை அணிந்து ஏதேனும் சவாலில் ஜெயிக்க வேண்டுமா.. பெயரை கேட்டால் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

தலையில் தண்ணீர்

ஆணுறையில் நீரை நிரப்பி தலைமீது போட்டுக்கொள்வதுதான் காண்டம் சேலஞ்ச். இந்த கொடுமையான நிகழ்வு ஏன் இவ்வளவு பிரபலமாகிவருகிறது என்பது புரியாத புதிர்.

வெட்டி வேலை

ஆணுறை சவாலை நடத்துவோர், அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வைத்துள்ளனர். அதிலும், இந்த கேம் ஆடினால், யாருக்காவது நன்மை கிடைக்கிறதா, இல்லையா என்பது போன்ற எந்த ஒரு தகவலும் இல்லை.

129596.alfabetajuega-condom-challenge-03122015

உயிருக்கும் சவால்

ஆணுறை சவாலை வெறும் வேடிக்கை என்ற அளவில், செய்துகொள்வதில் தப்பில்லை. ஆனால் இதில் விபரீதம் உள்ளது. ஆணுறையில் ஏகப்பட்ட நீரை நிரப்பி தலையில்போடும்போது, அது உடைகிறது. உடைந்ததும், ஆணுறை பாகங்கள், மூக்கு, வாயை முழுமையாக அடைக்கிறது. உடனடியாக யாராவது அதை நீக்காவிட்டால், மூச்சு திணறி அந்த நபர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.