ஆண்களே ! உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதோ சில சிம்பிள் டிப்ஸ்!

தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் பெண்கள் என்று நினைக்க வேண்டாம். தற்போதைய ஆண்களும் தங்கள் அழகின் மீது அக்கறை கொண்டுள்ளனர்.

அதிலும் இன்றைய காலத்தில் அழகு இல்லாவிட்டால், யாரும் மதிப்பதில்லை. அக அழகைக் காண்பதற்கு பதிலாக புற அழகைத் தான் பலரும் முதலில் காண்கிறார்கள்.

எனவே ஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங்களை சந்தித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அழகு குறிப்புக்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள்.

இதனால் நீங்கள் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் தங்களின் அழகைப் பராமரிக்க நேரமில்லாதவர்களுக்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளாக இருக்கும்.

தூக்கமின்மையால் உங்களின் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? அப்படியெனில் சில்வர் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து குளிர்ந்ததும், கண்களின் மேல் சிறிது நேரம் ஒத்தடம் கொடுங்கள். இதனால் உங்கள் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

பெண்கள் தான் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. மாய்ஸ்சுரைசர் என்பது ஆண், பெண் என இருவருக்கும் தயாரிக்கப்பட்டவையே.

முக்கியமாக மாய்ஸ்சுரைசரின் நன்மை என்னவெனில், சருமத்தை வறட்சியடையாமல் பாதுகாக்கும். எனவே சருமம் வறட்சியடைந்து சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், மாய்ஸ்சுரைசர் ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்துங்கள். இதனால் சருமம் அழகாக இருக்கும்.

பல ஆண்களுக்கு காலையில் வேகமாக எழும் பழக்கமே இருக்காது. அதனால் ஷேவிங் செய்யாமல் சில நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். நீங்களும் இப்பேற்பட்டவர்களாக இருந்தால், இரவிலேயே ஷேவிங் செய்துவிட்டு தூங்குங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட நாட்டம் குறைவதற்கான காரணங்கள்!

ஆண்களுக்கு 60 வயது வரையிலும் கூட உடலுறவு மீதான நாட்டம் இருக்கும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் நின்ற பிறகு உடலுறவில் பெரிதாக நாட்டம் இருக்காது. கணவனின் ஆசைக்காக மட்டுமே அவர்கள் இணங்க ஒத்துழைப்பார்கள். மாதவிடாய் காரணம் மட்டுமின்றி, கணவரின் செயல்பாடுகள், உறவில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சிலவற்றின் காரணத்தினால் கூட பெண்கள் உடலுறவில் ஈடுபட விருப்பமின்றி போவார்கள். அவற்றை பற்றி இனிக் காண்போம்…

உறவில் நாட்டம் குறைவு

இல்லறத்தில் ஏதேனும் பிரச்சனை அல்லது சண்டை, தனிப்பட்ட பாதிப்பு போன்ற காரணத்தினால் கணவன், மனைவி உறவிலேயே நாட்டம் குறைந்து போவது கூட காரணமாக இருக்கலாம்.
20-1455951286-1sevenreasonsyourwifeisntinterestedinhavingintercoursewithyou

வலி மிகுந்த உடலுறவு

சில ஆண்கள் மிகவும் வேகமாக செயல்படுவதால் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது மிகுதியான வலி ஏற்படும். இதன் காரணமாக மீண்டும் உடலுறவில் ஈடுபட தயக்கம் காட்டலாம்.
20-1455951291-2sevenreasonsyourwifeisntinterestedinhavingintercoursewithyou

இறுக்கம் குறைந்து காணப்படுவது

கணவன், மனைவி பந்தத்தில் இறுக்கம், இணக்கம் குறைந்து போனாலும் கூட உடலுறவில் ஈடுபட அவர் விரும்பாலம் போகலாம். சில சமயங்களில் நீங்கள் நீண்ட நாட்களில் அவருடன் இறுக்கமான உறவில் இல்லாதிருந்தாலும் கூட அவர்கள் இதில் நாட்டம் குறைந்து காணப்படலாம்.
20-1455951296-3sevenreasonsyourwifeisntinterestedinhavingintercoursewithyou (1)

முற்றிலும் சோர்வு

வேலை அல்லது உடல் நலக் குறைபாடு காரணமாக அவர்கள் முற்றிலுமாக சோர்வாக இருந்தாலும் கூட உடலுறவில் ஈடுபட விரும்ப மாட்டார்கள்.
20-1455951303-4sevenreasonsyourwifeisntinterestedinhavingintercoursewithyou

சலித்துவிட்டார்

குறிப்பிட்ட வயதுக்கு பிறகு பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இயற்கையாகவே குறைந்து விடும். சலிப்பாக தான் எண்ணுவார்கள்.
20-1455951308-5sevenreasonsyourwifeisntinterestedinhavingintercoursewithyou

ஒரே மாதிரியான செயல்பாடுகள்

ஒரே மாதிரியான செயல்பாடுகளும் கூட இதில் நாட்டம் குறைய காரணமாக அமையலாம்.
20-1455951315-6sevenreasonsyourwifeisntinterestedinhavingintercoursewithyou

உணர்ச்சி ரீதியான பிணைப்பு

உடலுறவில் ஈடுபட வேண்டுமெனில் உணர்ச்சி ரீதியாகவும், காதல் ரீதியாகவும் முதலில் இணைய வேண்டும். உணர்ச்சி ரீதியாக இன்றி உடல் ரீதியாக மட்டும் இனைய நினைக்கும் போது அவர்களுக்கு நாட்டம் குறைய ஆரம்பிக்கும்.
20-1455951322-7sevenreasonsyourwifeisntinterestedinhavingintercoursewithyou

ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்

கிசுகிசு பேசுவதும், எந்த விஷயமாக இருந்தாலும் தோண்டி, துருவி ஆராய்வதும், எதையும் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பதும் பெண்களின் இயற்கை பண்புகளில் சிலவன. அதற்கென பெண்கள் மிகவும் மோசமானவர்கள் அல்ல. அவர்களை போல அரவணைப்புடன் ஆண்களை பார்த்துக் கொள்ள யாரால் முடியும். ஆணென்றால் இப்படி தான் இருக்க வேண்டும்? பெண்களின் பார்வையில்!!! ஆனால், ஆண்களை பற்றி தவறாகவும் பெண்கள் நினைப்பதுண்டு. இதற்கு சினிமாவும் கூட ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதாரண நோக்கத்துடன் ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள். அவற்றில் சிலவன பற்றி இனிக் காண்போம்… இந்த மூணு விஷயத்துல நீங்க சரியா இருந்தா… இல்வாழ்க்கை செழிக்கும்!

எண்ணம் 1
கேள்வி கேட்டால், சந்தேகப்படுகிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் பெண்களின் பாதுகாப்பு கருதி தான் கேள்வி கேட்கிறார்கள் என அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.

எண்ணம் 2
நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

எண்ணம் 3
எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

எண்ணம் 4
ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான்.

எண்ணம் 5
அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம். டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.

எண்ணம் 6
வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. (எப்பவுமேவா அப்படி இருப்பாங்க… என்னமா நீங்க இப்படி பண்றீங்க…)

எண்ணம் 7
முகநூலில் ஆன்லைனில் இருந்தும் அவர்களுடன் சாட்டிங் செய்யாமல் இருந்தால், வேறு பெண்ணுடன் கடலை வறுத்துக் கொண்டிருப்பார்கள் என்றும் பெண்கள் பரவலாக எண்ணுவதுண்டு.

பொண்டாட்டி சந்தோசத்துக்காக தினமும் காலை 2 மணி நேரம் ஒதுக்குங்கள்

அவதி அவதியாக காலை எழுந்ததும் அலுவலகத்தை நோக்கி பறக்கும் வாழ்க்கை. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது கூட குறைந்துவிட்டது. திருமணத்தின் போது கிடைக்கும் அந்த பத்து நாள் விடுமுறை வரை தான் ஆசையும், மோகமும். பிறகு மீண்டும் அதே அவதி அவதியான அவசரக்கால நடவடிக்கை போன்ற வாழ்க்கை தான். தினமும் நீங்கள் ஒரு இரண்டு நிமிடம் சில விஷயங்களுக்காக செலவளித்தால் உங்கள் இல்லற வாழ்க்கையும் காதலில் திளைத்து பெருமகிழ்ச்சி அடையும். இதற்காக நீங்கள் காசு, பணம் ஏதும் செலவு செய்ய வேண்டாம். வீட்டிலே இருந்தப்படி உங்கள் மனைவியுடன் சில செயல்பாடுகளில் ஈடுபட்டாலே போதுமானது….

தீண்டுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் காலை எழுந்தவுடன் இதமாக கட்டிப்பிடித்துக் கொள்ளுதல், கை, கால்களை தீண்டி பிடித்துவிடுவது, செல்லமான முத்தம். இந்த மூன்றும் நீங்கள் நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் செயல்படவும், மன அழுத்தம் இன்றி இருக்கவும் உதவும்.

நேர்மறையான பேச்சு காலை எழுந்ததும் உங்கள் மனைவி, பிள்ளை, பெற்றோருடன் நேர்மறையான பேச்சில் ஈடுபடுவது. முக்கியமாக அரசியல் பேசிவிட வேண்டாம். நல்ல விஷயங்களை பேசுங்கள், நல்ல எண்ணங்களை அவர்களது மனதினுள்ளே விதைக்க செய்யுங்கள்.

தேநீர் ஊற்றிக் கொடுப்பது தினமும் இல்லையெனிலும் கூட, அவ்வப்போது உங்கள் மனைவி எழுந்திருக்கும் முன்பு, நீங்கள் அவர்களுக்கு தேநீர் ஊற்றி கொடுத்து பாருங்கள். குறைந்தது ஒரு வாரத்திற்காவது அனைவரிடமும், என் கணவர் தேநீர் ஊற்றிக்கொடுத்தார் என பெருமையாக பேசுவார்கள்.

எழுப்பிவிடுவது அவர்களுக்கு முன்பு எழுந்து அவர்களை எழுப்புவது. அதெற்கென அவர்கள் நேற்றிரவு அதிக வேலை செய்து அலுத்து, சோர்ந்து உறங்கும் போது கோழிக் கூவும் நேரத்தில் எழுப்பிவிட்டு திட்டு வாங்கிக்கொள்ள வேண்டாம். சாதாரண நாட்களில் எழுப்பிவிடுங்கள். மேல் கூறியவாறு தேநீரும் சேர்த்துக் கொடுத்தால் உறவில் இன்பம் பெருகும்.

குறுஞ்செய்திகள் வீட்டில் இருந்து அலுவலகம் சென்றவுடன் மனைவியை மறந்துவிட வேண்டாம். அலுவலகம் சென்றதும், சென்றடைந்துவிட்டேன் என்ற ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள். நேரம் கிடைக்கும் போது அழைத்து பேசுங்கள்.

ஆங்காங்கே சில குறிப்புகள் வீட்டில் ஆங்காங்கே அவர்களது கண் பார்வை படும் இடங்களில் சில குறிப்புக்கள் எழுதி வையுங்கள். அவர்களை புகழ்ந்து, அல்லது ரொமாண்டிக் வாசகங்கள் போன்றவை. சுயமாக வரவில்லை என்றால், கூகிளில் இருந்து சுட்டாவது நல்ல குறிப்புகளாக எழுதி வையுங்கள். பிறகு உங்கள் இல்லறமும் ஓர் அமர காவியம் போல செம்மையாக இருக்கும்.

trytospendtwominuteseverymorningforthesethings

மின்னல் தாக்கி நிலை குலைந்த விமானம் (Viral Video)

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த கன்சாஸ் 438 என்ற விமானம் உயரழுத்தம் கொண்ட மின்னல் தாக்கியதால் நிலை குலைந்தது.

இந்த திடீர் தாக்குதலால் ரன்வேயில் தரையிறங்குவதற்கு உதவும் துல்லிய அணுகுமுறை பாதை காட்டி (Precision Approach Path Indicator) விமானிக்கு, தெரியாமல் போனது. எனவே விமானி, உடனடியாக தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் பறந்து கொண்டே இருந்தார். மணிக்கு 122 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்று கொஞ்சம் அடங்கிய பிறகே அவர் தரையிறங்கினார்.

1 2 3 4 120