அவெஞ்சர்ஸ் க்ரிம் – திரை விமர்சனம்| Avengers Grimm – Film Review

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைப்போடும் அவெஞ்சர்ஸ் க்ரிம் திரைப்படம் வித்தியாசமான, புதுமையான கதைக்களத்தை கொண்டுள்ளது.

கதைப் புத்தகங்களிலும் திரைப்படத்திலும் நாம் கண்டுகளித்த தேவதைகள் நிஜ உலகை கைப்பற்ற நினைக்கும் வில்லனிடமிருந்து எவ்வாறு மக்களை காப்பாற்றினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

அழகான ஆடைகள் அணிந்து மென்மையாக காட்சியளிக்கும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல், ரெட் ரைடிங் ஹூட் ஆகிய கதாப்பாத்திரங்கள் இந்த படத்தில் ஆக்ஷன் நாயகிகளாக மாறியுள்ளனர்.

மாயாஜால உலகில் இருந்து மந்திர கண்ணாடி வழியாக ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின் நிஜ உலகிற்கு வருகிறார். தனது பிரத்யேக மாயஜால சக்திகளைக் கொண்டு உலக மக்களை அடிமைப்படுத்த திட்டமிடுகிறார். ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின்னின் சதியை முறியடிக்க அவரை பின்தொடர்ந்து வரும் ஸ்னோ வைட் தனது கணவரை கொன்றதற்காக அவரை பழிவாங்க துடிக்கிறாள்.

இந்நிலையில், ஸ்னோ வைட்டை மாயாஜால உலகத்தில் சந்திக்க வரும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் அவள் அங்கு இல்லாததை அறிந்து ஏமாற்றமடைகிறார்கள்.

ஸ்னோ வைட் தனது கணவன் கொலைக்கு காரணமாவர்களை பழி தீர்க்க நிஜ உலகத்திற்கு சென்றிருக்கிறார் என்று அறிந்ததும் இவர்கள் அனைவரும் நிஜ உலகத்திற்கு பயணிக்கிறார்கள்.

மாயாஜால உலகில் இருந்து புறப்பட்ட அனைவரும் நிஜ உலகில் ஸ்னோ வைட்டை சந்திக்கும்போது, வில்லனான ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின் லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராக இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள்.

தனது தந்திர சக்திகளை பயன்படுத்தி மாயாஜால உலகில் இருந்து படைகளை நிஜ உலகிற்கு கொண்டு வந்து உலக மக்களை தனது அடிமைகளாக மாற்ற ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின் திட்டமிடுகிறான்.

இந்நிலையில் நிஜ உலகிற்கு வந்த சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் தங்களின் மந்திர சக்திகளை உதவியோடு மக்களை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பது மீதி கதை.

ஜெரேமி எம்.இன்மன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதைக்களம் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. அழகிய தேவதைகள் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சண்டையிடுவதை பார்க்க வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.

வில்லனாக நடித்திருக்கும் காஸ்பர் வான் டியன் தத்ரூபமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்துள்ளார். படத்தில் இடம்பெறும் பிற நடிகர்களைவிட இவரே நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகிகளை எடுத்துக்கொண்டால் ரெட் ரைடிங் ஹுட்டாக வரும் எலிசபெத் பீட்டர்சென் நன்றாக நடித்துள்ளார்.

பிற கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளனர். ஆனால் கதாநாயகிகளின் தோற்றத்தில் அதிக வித்தியாசம் இல்லாததால் கதாப்பாத்திரங்களின் பெயர்களில் குழப்பம் ஏற்படுகிறது.

ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் செயற்கையாக இல்லாமல் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. கிரிஸ் ரைடன்ஹாரின் இசையமைப்பு படத்திற்கு வலு சேர்கிறது.

மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் க்ரிம்’ புதிய அனுபவம்.

காஞ்சனா 2 திரைவிமர்சனம்

Rating: 3.0/5

நீண்ட காலத்திற்கு பிறகு கோலிவுட் இரண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இடையே ஒரு பெரிய மோதல் காண்கின்றது. அது மேல் வெளியே வரும் எந்த ஒரு சொல்ல கடினம் என்றாலும், நாம் என்ன சொல்ல முடியும் இந்த திரைப்படம் அவுட் வர்ணித்தனர் வேண்டும், எப்படி இருக்கிறது. சரி கண்மணி பிறகு, அது இப்போது காஞ்சனா 2 விமர்சனம் நேரம் ஆகிறது.

காஞ்சனா 2 சதி: நாம் அனைவரும் காஞ்சனா 2 மிகவும் பிடித்திருந்தது முனி தொடரின் மூன்றாவது தவணை எனவே சதி அழகான கணிக்க என்பது உங்களுக்குத் தெரியும். என்ன இங்கே மிகவும் முக்கியமான படம் விவரிக்கிறார் எப்படி இருக்கும். ராகவா லாரன்ஸ் டாப்சி, மயில்சாமி, மனோபாலா மற்றும் ‘Jangiri’ மதுமிதா நடித்தார் சக ஒரு சுவாரஸ்யமான கூட்டத்தை ஒரு டிவி சேனல் ஒரு கேமரா மனிதன் பணிபுரிகிறார். அவர்கள் தங்கள் வணிக பற்றி சென்று, ஒரு நாள் அவர்கள் தங்கள் வேலையை அட்டவணை ஒரு பகுதியாக ஒரு பேய் வீட்டில் (தற்செயலாக) நுழைய மற்றும் திகில் தங்கள் கண் முன்னால் அவிழ்க்கப்பட்டு சாட்சி பிறகு திரும்ப வேண்டியதாயிற்று. என்று சொல்ல தேவையில்லை, ஒரு சில நாட்களுக்கு பிறகு அவர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் Taapsee இருவரும் பழிவாங்குவதற்கு எண்ணுகிறார் வெவ்வேறு ஆவிகள் மூலம் கொண்டிருந்தன என்று கண்டறிய. யார் அந்த பேய்கள் மற்றும் அவர்கள் என்ன விரும்புகிறீர்கள் கதை அம்சமான உருவாக்குகிறது. நிகழ்ச்சிகள்: முன்னணி நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மொழியில் நிகழ்ச்சி அனைத்து வழி திருடி கொண்டு படம் பிரகாசிப்பார் வேண்டும். கோவை சரளா, வழக்கம் போல் சிறந்த அவரது நகைச்சுவை ததும்பும் ஒரு உள்ளது மற்றும் Taapsee கூட ஒரு நியாயமான வேலை செய்துள்ளான். நித்யா மேனன் ஒரு சிறப்பு தன்மை விளையாடி வருகிறார் சினிமா தியேட்டரில் வெளியேறும் போது ஒரு அவரது பாத்திரம் பற்றி நினைக்கிறேன் என்று, இவ்வளவு அளித்துள்ளது. இப்போது அவள் நிச்சயம் அவரது பாத்திரம் குறுகிய காலமே உள்ளது கூட ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. நகைச்சுவை படத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது எனவே அனைத்து நகைச்சுவையாளர்கள் நன்கு பயன்படுத்தி வருகிறது போதுமான திரையில் இடத்தை வழங்கி வருகின்றன. மேலும் வாசிக்க: இம்ரான் ஹஷ்மி திரு எக்ஸ் திரைப்பட விமர்சனம்: குழந்தைகள் பிடிக்கும்! பறிக்கிறது: ஒரு காட்சி விளைவுகள் சமாதானம் அனைத்து என்று விலா எலும்பு-கிசுகிசுமுட்டல் நகைச்சுவை மற்றும் இதயம் நிறுத்தும் திகில் தருணங்களை மத்தியில், காஞ்சனா 2 ஆராயவேண்டியிருக்கிறது (அதன் முன் விட), மேலும், சொல்ல முடியாது. ராகவா லாரன்ஸ், ஒரு இயக்குனர் ஒரு நீண்ட வழி வந்து உறுதி ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை இட்டுக்கட்டியாக எப்படி தெரியும். எனினும், இரண்டாவது பாதியில் பகுதிகளில் சோர்வை மற்றும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மேல்-நிலை உள்ளன. க்ளைமாக்ஸில் ஒரு சிறுவன் அப்பட்டமாகவும் நிறைவாக இல்லை. அது சில நேரங்களில் மிகவும் சத்தமாக கிடைக்கும் என்று, பின்னணி இசையிலும், பயம் காரணி வரை உதவுகிறது லியோன், சி சத்யா, எஸ் தமன் மற்றும் Ashwamithra இசை பொருட்களை வழங்கினார். Rajavel Olhiveeran மூலம் ஒளிப்பதிவு துல்லியமான மற்றும் திகில் வகையை நீதி செய்துள்ளார். எடிட்டிங் குறிப்பாக முதல் பாதியில் மிருதுவான ஆனால் படத்தின் நீளம் கொடுக்கப்பட்ட, ஒரு சில மேலும் பகுதிகள் மெய்நிகர் கத்தரிக்கோலால் சந்திச்சிட்டேன் முடியும் உணர கூடும். இங்கே காஞ்சனா 2 ஒட்டுமொத்த பார்வையை மதிப்புரையெழுதத் / வாசிக்க: காஞ்சனா 2 நிச்சயமாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் ஆனால் எளிதாக ஒரு சிறந்த இரண்டாவது பாதி மிகவும் சிறப்பாக இருந்தது. ஒருவேளை லாரன்ஸ் ‘முனி 4’ அவரது ஃப்ளாஷ்பேக் சூத்திரம் போக அனுமதிக்க வேண்டும்.

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – திரை விமர்சனம்

வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை பற்றிய கதையே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பல்வேறு கனவுகளுடன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்கள் பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்செயன்.

இவர்களில் பாபி சிம்ஹா வித்தியாசமான கதை எழுதி, அதன்மூலம் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால், சென்னையின் சுற்றுப்புற சூழ்நிலை, போதிய வருமானமின்மை போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியான கதை எழுத முடியாமல் தவிக்கிறார்.

மற்றொருவரான பிரபஞ்ஜெயன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லிங்கா சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் பார்க்கும் பெண்களிடமெல்லாம் அசடு வழிகிறார்.

ஒருமுறை கிராமத்திற்கு லிங்கா செல்லும்போது அங்கு நாயகியை பார்க்கிறார். ஏற்கெனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவரான நாயகியுடன் நட்பாக பழகி வருகிறார் லிங்கா. இந்த நட்பு நாளடைவில் பெரிதாக வளர்கிறது.

ஒருநாள் தேர்வு எழுதுவதற்காக சென்னை வரும் நாயகியும், லிங்காவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இதனால் நாயகி கர்ப்பமடைகிறார். அவளுடைய கர்ப்பத்தை கலைக்குமாறு லிங்கா வற்புறுத்துகிறார். ஆனால், அவளோ அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இவர்கள் விஷயம் பிரபஞ்ஜெயனுக்கு தெரியவர, இவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார்.

முடிவில், இவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததா? பாபி சிம்ஹா வித்தியாசமான கதை எழுதி சினிமாவில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

பாபி சிம்ஹா ஹீரோவாக அவதாரம் எடுத்து வெளிவந்திருக்கும் முதல்படம். தனது முந்தைய படங்கள் போல் இந்த படத்தில் கொஞ்சம் அழகாக இருக்கிறார்.

நாயகனாக இவரது நடிப்பு ஓகே ரகம்தான். சிம்ஹாவின் நண்பராக வரும் லிங்கா செய்யும் சில்மிஷங்கள் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், சிந்திக்கவும் வைக்கிறது.

நாயகிகளான பனிமலர், நீஷா ஆகியோர் கொள்ளை அழகு. படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பலத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் எந்தவிதமான பிரச்சினைகளில் சிக்கி கொள்கின்றனர், அவர்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன். படத்தின் சில காட்சிகள் சுவாராஸ்யமாக இருந்தாலும், பல காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கேற்ற சராசரியான ஒளிப்பதிவை பதிவு செய்திருக்கிறார். கேம்லின்- ராஜா இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள் இருந்தாலும் பின்னணி இசை, பாடல்கள் சுமாராகவே உள்ளன.

மொத்தத்தில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கலாம்

நண்பேன்டா – திரை விமர்சனம்

nanbenda1842014_m2படம் ஆரம்பிக்கும்போதே உதயநிதியும்-சந்தானமும் ஜெயிலில் இருப்பதுபோன்ற காட்சியுடன் தொடங்குகிறது. அதன்பின் பிளாஸ்பேக் காட்சிகளாக விரிகிறது.
கதைப்படி நாயகன் உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய பணத்தில் ஊர் சுற்றி, ஜாலியாக பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்து வருகிறார் உதயநிதி.
அதுபோல், ஒருமுறை திருச்சிக்கு போயிருக்கும்போது அங்கு நயன்தாராவை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். ஆனால், நயன்தாராவோ இவரது காதலை கண்டுகொள்வதாக இல்லை.
சமூக சேவைகளில் நாட்டம் உள்ள நயன்தாராவை எப்படியாவது தன் பக்கம் ஈர்க்கவேண்டும் என்பதற்காக அவளுக்கு பிடித்ததுபோல், உதயநிதியும் சமூக சேவைகளில் ஈடுபட தொடங்குகிறார். அதில் நயன்தாராவையும் கவர்கிறார். இத்தோடு முதல் பாதி முடிவடைந்திருக்கிறது.
இடைவேளை வரை சந்தானம்-உதயநிதி காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. படத்துக்கு படம் நயன்தாராவின் அழகு கூடிக் கொண்டேதான் இருக்கிறது. சமூக சேவகியாகவும் மனதில் பதிகிறார். சந்தானம் பேசும் வசனங்கள் எல்லாம் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.
இப்படத்தில் உதயநிதி முதன்முதலாக ஒரு சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறார். அண்ணாமலை படத்தில் குஷ்புவை வில்லன்களிடமிருந்து ரஜினி காப்பாற்றும் சண்டைக் காட்சியைப் போலவே இந்த படத்தில் ரொமான்ஸ் கலந்த சண்டைக் காட்சியை அமைத்திருக்கிறார்கள். அது நன்றாகவே வந்திருக்கிறது. உதயநிதியும் அதை நன்றாக செய்திருக்கிறார்.
மேலும் விமர்சனம் விரைவில்…
1 16 17 18