பிரபாஸ் பாகுபலி – திரை விமர்சனம்

பிரபாஸ் பாகுபலி – திரை விமர்சனம்

காலேஜ் படிக்கும் காலத்தில் இருந்தே பிரபாஸின் அப்பா பிரபுவும், காஜலின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதால் பிரபாஸும், காஜலும் சிறுவயதிலிருந்தே நெருங்கி பழகுகிறார்கள். ஒருகட்டத்தில் காஜலின் அப்பா, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுவிடுகிறார். பிரபாஸ் இந்தியாவிலேயே வளர்ந்து பெரியவனாகிறார். காலேஜில் படித்து வரும் பிரபாஸை பிரபல ரவுடியான முகேஷ் ரிஷியின் மகள் ஒருதலையாக காதலிக்கிறாள். பிரபாஸிடம் சென்று தனது காதலை சொல்லும்போது பிரபாஸ் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால், அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். தனது மகளின் காதலை புரிந்துகொண்ட முகேஷ் ரிஷி, பிரபாஸை அழைத்து தனது மகளின் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் அவனை மிரட்டுகிறார். உடனே, பிரபாஸ் தனக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருப்பதாகவும், அவள் தற்போது கோமா நிலையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு அனுதாப கதையை கூறி முகேஷ் ரிஷியிடமிருந்து தப்பிக்கிறார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற காஜல் அகர்வால் திரும்பவும்

The post பிரபாஸ் பாகுபலி – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
பிரபாஸ் பாகுபலி – திரை விமர்சனம்

தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்

தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்

சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு வேனுக்கு தவணை கட்டாததால் கடன் கொடுத்த சேட்டு, அந்த வேனை எடுத்துச் சென்றுவிடுகிறார். இதுபற்றி கருணாஸ் சந்தானத்திடம் முறையிட, சந்தானம் பதிலுக்கு சேட்டுவின் காரை தூக்குவதற்காக சேட்டு வீட்டுக்கு கருணாசுடன் செல்கிறார். அப்போது, சேட்டு மகளான நாயகி சனாயா இவர்களை போலீசிடம் மாட்டி விடுகிறாள். இதனால் கடுப்பான சந்தானம் நாயகியை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று துடிக்கிறாள். அதற்குள் நாயகி சனாயா, சந்தானத்தை தேடி அவரது வீட்டுக்கே வருகிறாள். அப்போதுதான் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்தவர்கள் என்பதும் தெரிகிறது. இதன்பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் நாயகியின்

The post தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு – திரை விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு – திரை விமர்சனம்

மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் சிவாவை நாயகி நைனா சர்வார் காதலித்து வருகிறார். எந்த வேலைக்கும் செல்லாத சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டாரின் ரசிகர்களான நண்பர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதை, அவ்வப்போது போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார். ஒருமுறை ராஜ்கபூர், சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு உங்களை வைத்து உங்கள் தலைவர் பெரிய நிலைக்கு ஆளாகிவிட்டார். அவரை வைத்து நீங்கள் ஏன் பெரிய நிலைக்கு வரக்கூடாது. அவருடைய படங்களை வாங்கி, மதுரை ஏரியாவில் விநியோகம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.

The post அட்ரா மச்சான் விசிலு – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

அட்ரா மச்சான் விசிலு – திரை விமர்சனம்

பிச்சைக்காரன் (2016) – திரை விமர்சனம்

நடிகர் : விஜய் ஆண்டனிநடிகை : சாத்னா டைடஸ்இயக்குனர் : சசிஇசை : விஜய் ஆண்டனிஓளிப்பதிவு : பிரசன்ன குமார்
பெரிய தொழிலதிபரின் மகன் விஜய் ஆண்டனி. அப்பா இல்லாத இவர் அம்மாதான் தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து வருகிறார். இதுவரை தொழில்கள் அனைத்தையும் கவனித்து வந்த இவரின் அம்மா, வெளிநாட்டில் இருந்து வரும் விஜய் ஆண்டனியிடம் அனைத்தையும் ஒப்படைக்கிறார்.

இதன்பின் எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி அம்மாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்படுகிறது. இதனால் விஜய் ஆண்டனியின் அம்மா கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என்று பல முயற்சிகளில் சிகிச்சை அளிக்கிறார். ஆனால், ஏதும் பலனளிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் ஒரு சாமியார், உன் அம்மா இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் 48 நாட்களுக்கு பிச்சைக்காரனாக வாழ வேண்டும் என்று கூறுகிறார். இதையேற்று பிச்சைக்காரனாக வாழ ஆரம்பிக்கிறார்.

அதன்பின் விஜய் ஆண்டனிக்கு பல இன்னல்கள் வருகிறது. ஒருபக்கம் விஜய் ஆண்டனியின் உறவினர் அவரின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். இதையெல்லாம் சமாளித்து அம்மாவிற்காக வேண்டிய வேண்டுதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் ஆண்டனி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் அம்மாவிற்காக ஏங்கும் மகனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக சாத்னா டைடஸ் விஜய் ஆண்டனி ஒரு பிச்சைக்காரன் என்பது தெரியாமல் அவருடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார், சந்தோஷமாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் என்று தெரிந்து அவரை விட்டு விலக நினைத்தாலும், காதலால் அவருடனே பயணிப்பது என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வித்தியாசமான கதை கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சசி. பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை அப்படியே படம் பிடித்து காண்பித்திருக்கிறார். பிச்சைக்காரர்களின் உலகத்தில் சோகம் மட்டுமில்லை, சந்தோஷமும் இருக்கிறது என்பதை காட்டியதற்கு பெரிய கைதட்டல். படத்தின் பெரிய பலம் வசனம். விஜய் ஆண்டனியிடம் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கிறார்.

பிரசன்ன குமாரின் கேமரா பிச்சைக்காரர்களின் எளிய உலகை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பிச்சைக்காரன் தீம் இசையும், நூறு சாமிகள் பாடலும் ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘பிச்சைக்காரன்’ செழிப்பான்.

போக்கிரி ராஜா (2016) – திரை விமர்சனம்

நடிகர் : ஜீவா
நடிகை :ஹன்சிகா
இயக்குனர் :ராம்பிரகாஷ் ராயப்பா
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :ஆஞ்சநேயன்
ஜீவாவுக்கு அடிக்கடி கொட்டாவி விடும் பழக்கம் இருக்கிறது. இதனால், இவரது வேலையும், காதலும் கைவிட்டு போகிறது. இந்நிலையில், ஒருநாள் ஹன்சிகாவை பார்க்கும் ஜீவா, அவள் மீது ஈர்ப்பு கொள்கிறார்.

அந்த நேரத்தில் ஹன்சிகாவின் ஹேண்ட் பேக்கை ஒருவன் திருடிச் செல்ல, அதை பறித்து பார்க்கும்போது, சிகரெட், மது பாட்டில் எல்லாம் இருப்பதை பார்க்கும் ஜீவா, ஹன்சிகா மீது தவறான அபிப்ராயம் கொள்கிறார்.

அதன்பிறகு, ஹன்சிகா வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே ஜீவாவுக்கு வேலை கிடைக்கிறது. அங்கேயும் இவரது கொட்டாவி பழக்கம் தொடர, அங்கேயும் அவருக்கு வேலை பறிபோகும் சூழ்நிலை உருவாகிறது.

இந்நிலையில், ஐடி கம்பெனியில் பணிபுரிவது மட்டுமின்றி சமூக சேவையும் செய்துவரும் ஹன்சிகா மற்றும் அவரது குழுவுடன் ஜீவாவும் வெளியூர் செல்கிறார். அப்போது, அந்த ஊரில் மிகப்பெரிய ரவுடியான சிபிராஜ், பொது இடத்தில் சிறுநீர் கழித்தார் என்பதற்காக அவர் மீது தண்ணீர் பாய்ச்சி, அவமானப்படுத்தி விடுகிறார் ஜீவா.

பின்னர் சிபியை ஜெயிலுக்கும் அனுப்பி விடுகிறார். அவமானத்தை தாங்க முடியாத சிபிராஜ், இதற்கு காரணமான ஜீவாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில், சமூக சேவைகளில் ஈடுபடும் ஹன்சிகா மீதிருந்த தவறான அபிப்ராயம் காதலாக மாறுகிறது.

இறுதியில், இருவரும் காதலித்தார்களா? சிபிராஜ் ஜீவாவை பழி தீர்த்தாரா? ஜீவாவின் கொட்டாவி பழக்கம் அவருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றத்தை கொண்டு வந்தது? என்பதே மீதிக்கதை.

ஜீவா இந்த படத்தில் மிகவும் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இவருடைய ஒவ்வொரு முகபாவனையும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதென்றால் ஜீவாவுக்கு சொல்லித்தர தேவையில்லை. அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.

இப்படத்தில் வரும் ‘பப்ளி பப்ளி’ பாடலுக்கு ஏற்றார்போல், படம் முழுக்க மிகவும் பப்ளியாக வந்துபோகிறார் ஹன்சிகா. இவருடைய நடிப்பும் ஓகே ரகம்தான்.

சிபிராஜ் வித்தியாசமான வில்லனாக வந்து கலக்கியிருக்கிறார். இவருடைய நடிப்பு ஒவ்வொன்றும் இவரது அப்பா சத்யராஜை நினைவுபடுத்துகிறது. மேலும், ஜீவாவின் நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகளும் கலகலக்க வைக்கிறது. மனோபாலா, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, ராம்தாஸ் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கொட்டாவியை வைத்து இந்த படத்தில் ஒரு புது மெசேஜை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. தனது முந்தைய படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான முயற்சியை கையிலெடுத்தற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை காமெடியுடன் ரசிக்கும்படி நகர்வது சிறப்பு.

டி.இமானின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக ‘பப்ளி பப்ளி’ பாடல் பார்க்கும்போது ஒவ்வொரு நடன அசைவுகளும் மிகவும் ரசிக்க வைக்கிறது. ஆஞ்சநேயனின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘போக்கிரி ராஜா’ காமெடி கிங்.

1 2 3 4 5 18