பேஸ்புக்கில் கம்யூனிஸ்டுகள் பற்றி தவறான கருத்து: சீனிவாசன் மறுப்பு

பேஸ்புக்கில் கம்யூனிஸ்டுகள் பற்றி தவறான கருத்து: சீனிவாசன் மறுப்பு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீனிவாசன்.

டைரக்ஷன் மற்றும் கதை, திரைக்கதை எழுதுவதிலும் வல்லவர். இவரது பேஸ்புக்கில் கம்யூனிஸ்டுகள் பற்றி தவறான சில கருத்துகள் பதிவாகி இருந்தது. கம்யூனிஸ்டு தலைவர்கள் ஏழைகளின் வாழ்க்கையை சுரண்டுபவர்கள் என்றும், ஒருபோதும் கம்யூனிஸ்ட்டாக மாற வேண்டாம் என்று சீனிவாசன் தனது மகன் வினித்துக்கு அறிவுரை கூறுவது போலவும் அந்த கருத்துக்கள் இடம் பெற்று இருந்தன.

இதனை சீனிவாசன் மறுத்துள்ளார். தான் கூறியது போலவும், தனது மகனுக்கு தெரிவித்தது போலவும் பேஸ்புக்கில் வெளியான கருத்துக்களில் உண்மை இல்லை. இது என் மீதும் மகன் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் யாரோ சிலரால் பதிவிடப்பட்டுள்ளது.

அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்.