மீண்டும் விஷாலுடன் மோதும் சிம்பு

மீண்டும் விஷாலுடன் மோதும் சிம்பு

விஷாலும் சிம்புவும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் நடந்தது. தேர்தல் நடப்பதற்கு முன்னதாக விஷாலை பற்றி சிம்பு ஆவேசமாக பேசினார். இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தேர்தல் முடிவில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

தற்போது சிம்பு, விஷாலுடன் மோதும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘கதகளி’ படம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அதே நாளில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஷாலின் ‘கதகளி’ படத்தையும், சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தையும் பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.