கபாலி படப்பிடிப்பில் தன்ஷிகாவிற்கு காயம்

கபாலி படப்பிடிப்பில் தன்ஷிகாவிற்கு காயம்

ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்து வருகிறார். ரஜினியுடன் நடிக்க பல நடிகைகள் தவம் இருக்கும் போது தன்ஷிகாவுக்கு இந்த வாய்ப்பை டைரக்டர் ரஞ்சித் வழங்கியுள்ளார்.

பேராண்மை படத்தில் அறிமுகமான தன்ஷிகா மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்ததால் தான் இயக்கும் ரஜினி படத்தக்கு தன்ஷிகாவை ரஞ்சித் தேர்வு செய்தார்.

ரஜினி மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த வரிசையில் ரஜினியுடன் தன்ஷிகா ஓடி வருவது போன்று காட்சி படமானது. அப்போது எதிர் பாராதவிதமாக தன்ஷிகா கீழே தடுமாறி விழுந்தார். உடனே படப்பிடிப்பு குழுவினர் ஓடிச்சென்று அவர் எழுந்து நிற்க உதவி செய்தனர்.

மீண்டும் அவர் ரஜினியுடன் ஓடிவருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ரஜினியுடன் ஓடி வந்து கொண்டிருந்த தன்ஷிகா மீண்டும் கீழே விழுந்தார். இதில் அவரது கால்மூட்டு, இடுப்பு எலும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.

உடனே தன்ஷிகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் 2 நாள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். இதனால் தன்ஷிகா ரஜினியுடன் நடித்த அந்த காட்சியை உடனே படமாக்க முடியவில்லை. மற்றொரு நாளில் இந்த காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

தன்ஷிகா பல்வேறு படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், ரஜினியுடன் நடிக்க பயப்படுகிறார். இதனால், ஏற்பட்ட பதட்டம் காரணமாகத்தான் அவர் கீழே விழுந்து விட்டார். இனியாவது பதட்டம் இல்லாமல் நடிப்பார் எ