எனக்கு பிடித்த நடிகை லட்சுமிமேனன்: சித்தார்த்

எனக்கு பிடித்த நடிகை லட்சுமிமேனன்: சித்தார்த்

‘பாய்ஸ்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தவர் ஜெனிலியா. இதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிப் படங்களில் சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். திரிஷா, சுருதிஹாசன், அமலாபால், சமந்தா, ஹன்சிகா என்று பல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

சித்தார்த் இடம் உங்களுக்கு பிடித்தமான நடிகை யார் என்று கேட்ட போது, தன்னுடன் நடித்த நடிகைகள் அனைவருடைய பெயரையும் வரிசையாக சொல்லி இவர்களில் எல்லோரையும் எனக்கு பிடிக்கும் என்று கூறி தப்பிக்க பார்த்தார்.

இவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது யார் என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்திய போது, ஜிகிர்தண்டா படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த லட்சுமிமேனனைதான் மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் இயல்பான நடிகை. என்னுடன் ஜிகிர்தண்டா படத்தில் நடித்ததில் இருந்தே, என்னைப் பற்றி பெருமையாக கூறி வருகிறார். அதனால் கூட அவரை அதிகமாக பிடிக்கும் என்று கருதுகிறேன் என்றார்.