டாக்டர்கள், நர்சுகளுக்கு ஐ படம் சிறப்பு காட்சி: ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு

ff3ef6d7-5871-4a5a-8e1e-dc29c35fa6b4_S_secvpfவிக்ரம், எமிஜாக்சன், ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
பொங்கலுக்கு சென்னை அப்பல்லோ டாக்டர்கள் ‘ஐ’ படத்தை பார்க்க ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு செய்து கொடுத்தார். மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி அவர்களுக்கு விநியோகித்தார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். நர்சுகளும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர். இதன் மூலம் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் சேவையை நேரில் பார்த்த ஏ.ஆர். ரகுமானுக்கு பொங்கலை யொட்டி ‘ஐ’ படத்துக்கு அவர்களை அழைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவேதான் இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கி படம் பார்க்க வைத்தார். தாய் மேல் ரகுமான் அளப்பறிய பாசம் வைத்துள்ளார். அதன் வெளிப்பாடாகவே இச்சம்பவம் அமைந்தது.

விஜய்யின் 59-வது படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன்?

1c4a619a-3440-4dfb-8944-f0f0e101ad06_S_secvpfவிஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் ஸ்ரீதேவி, சுதிப் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தை அடுத்து அட்லி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். கலைப்புலி எஸ்.தாணு இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் 50-வது படமாக இப்படத்தில் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இப்படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் வில்லத்தனத்தால் மிரட்டிய ராஜேந்திரன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தார்.
அதன்பிறகு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் காமெடி வேடத்திலேயே நடித்தார். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘டார்லிங்’ படத்திலும் இவருடைய கதாபாத்திரம் அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அட்லி இயக்கவிருக்கும் படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 1,178 1,179 1,180