ரிலீசுக்கு தயாராகிவிட்ட வேதாளம்

ரிலீசுக்கு தயாராகிவிட்ட வேதாளம்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. இதற்காக, கடந்த ஒரு மாத காலமாக படக்குழுவினர் இரவு-பகல் பாராமல் உழைத்து வந்தனர்.

இறுதிக்கட்டமாக படத்திற்கு பின்னணி இசையமைக்கும் பணியை இசையமைப்பாளர் அனிருத் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் எல்லாம் முடிவடைந்து தீபாவளி ரேசில் களமிறங்க ‘வேதாளம்’ தயாராகிவிட்டது. இதை, அனிருத்துடன் இணைந்து பின்னிணி இசைக்கோர்ப்பு பணிகளை மேற்கொண்டு வந்த கிதார் கலைஞர் கேபா ஜெராமியா உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில்தான் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக இந்த தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

‘வேதாளம்’ படத்தில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், தம்பி ராமையா, அஸ்வின் கக்குமனு, சூரி, கபீர் சிங், ராகுல்தேவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.