சிம்புவுடன் நடிப்பது கடினமாக இருக்கிறது : மஞ்சிமா மோகன்

சிம்புவுடன் நடிப்பது கடினமாக இருக்கிறது : மஞ்சிமா மோகன்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதில் சிம்பு ஜோடியாக புதுமுக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் டாணா டகுபதி, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் மஞ்சுமா மோகன் தனது அனுபவம் குறித்து கூறும்போது… ‘சிம்பு படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் நிறைய வேடிக்கை செய்து கொண்டே இருப்பார். அவரால் நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். முக்கியமான காட்சிகளில் கூட கவனம் செலுத்த முடியவில்லை.

சிரிப்பை அடக்க முடியாமல் போகிறது. அவர் அந்த அளவுக்கு காமெடி செய்கிறார். எல்லோரும் என்னையே பார்ப்பது பற்றிக்கூட கவலைப்படாமல் நான் சிரிக்கிறேன். இதனால் சிம்புவுடன் சேர்ந்து நடிப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் சிம்பு எந்த காட்சியையும் எளிதாக நடித்து விடுகிறார்’ என்றார்.

மலையாள பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கும் மஞ்சிமா இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். சிம்பு வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். கவுதம் மேனனின் இந்த படம் சிம்புவுக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.