உலகை மிரளவைத்த இந்திய அரச குடும்பங்களின் சில விசித்திர நடவடிக்கைகள்!

அநாவசியமாக செலவு செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், ஆடம்பரத்தின் பேரிலும், பகட்டின் பேரிலும் அளவுக்கு மீறி, மற்றவர் முன் தங்களின் கௌரவம், செல்வாக்கு பெரியதாக தெரிய வேண்டும் என செலவு செய்பவர்கள் கண்டிப்பாக பெரிய செல்வந்தர்களாக தான் இருக்க முடியும்.

சில பல வருடங்களுக்கு முன்பு நமது அம்பானி அவர்கள் கட்டிய “அண்டிலா” இல்லமும் அவ்வாறானது தான். உலகலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு என்ற பெருமையுடன் மும்பையில் வானோங்கி நிற்கிறது. இது போன்று பல காரியங்களை இந்திய அரசு குடும்பங்களும் முன்னாளில் செய்திருக்கிறார்கள்.

ஆனால், அதில் அவர்கள் அப்படி என்ன விசித்திரமாக செய்திருக்கிறார்கள் என்பது தான் உங்கள் வியக்க வைக்கப் போகிறது.

பாதுகாவலர்களின் பாதுகாப்புக்காக ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய மைசூர் மகாராஜா
மைசூர் அரசரான நான்காம் கிருஷ்ணா ராஜா உடையார் தானது பாதுகாவலர்களை வெயிலில் இருந்த பாதிகாக்க ரோல்ஸ் ராய்ஸ் வாங்கினாராம். அது 1911 ஆம் ஆண்டு வடிவமைக்கபப்ட்டது. ஏறத்தாழ அதன் மதிப்பு நான்கு லட்சம் யூரோக்கள் என்று கூறப்படுகிறது. நான்காம் கிருஷ்ணா ராஜா உடையார், அக்காலத்தில் உலகளவில் பெரும் செல்வந்தராக திகழ்ந்தார். கிட்டதட்ட 35 பில்லியன் யூரோக்கள் அவரது சொத்து மதிப்பாக இருந்தது என கூறப்படுகிறது, 1940 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
30-1438231622-1factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor

800 நாய்கள் வளர்த்த நவாப் ஜுனாகார்
நவாப் ஜுனாகார் 800 நாய்கள் வளர்த்தது மட்டுமின்றி, ஒவ்வொரு நாய்க்கும் தனியாக ஓர் வேலைக்காரரையும் நியமித்திருந்தார். இதில் விசித்திரம் என்னவெனில், இவர் வளர்த்த இரண்டு நாய்களுக்கு 20-30 லட்சம் ரூபாய் வரை செலவழித்து திருமணம் வேறு செய்து வைத்தாராம். அன்றைய தினம் அவரது மாகாணத்திற்கு விடுமுறை நாள் எனவும் அறிவித்துள்ளார்.
30-1438231628-2factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor

உலகப்புகழ் பெற்ற வைரத்தை பேப்பர் வெய்ட்டாக பயன்படுத்தினார்
ஹைதராபாத்தின் கடைசி நிசாம் மிர் உஸ்மான் அலி கான் ஜேகப் வைரம் என்ற உலகின் ஐந்தாவது பெரிய வைரத்தை, பேப்பர் வெய்ட்டாக பயன்படுத்தியிருக்கிறார். தீக்கோழியின் முட்டை அளவு இருக்கும் அந்த வைரம் 184.97 காரட் என்றும் அதன் மதிப்பு ஐந்து மில்லியன் யூரோக்கள் என்றும் கூறப்படுகிறது. இப்போது அது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
30-1438231634-3factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor

குப்பை அள்ள ரோல்ஸ் ராய்ஸ் பயன்படுத்திய ராஜா ஜெய் சிங் அல்வார்
லண்டனில் ரோல்ஸ் ராய்ஸ் பணியாளி ஒருவர் அரசர் ஜெய் சிங்கை அவமரியாதை செய்த காரணத்தினால், ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி வந்து தனது ஊரில் குப்பை அள்ள வைத்தார். பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் பேரில் ரோல்ஸ் ராய்ஸில் குப்பை அள்ளுவதை நிறுத்தினர்.
30-1438231640-4factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor

படிகங்களால் அரண்மனையை நிரப்பிய உதய்பூர் குடும்பம்
உதய்பூர் குடும்பம் படிகங்கள் (Crystals) மீது மிக்க ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களது அரண்மனையில், நாற்காலிகள், சிம்மாசனங்கள், விளக்குகள் விசிறிகள் என அனைத்திலும் படிகங்கள் பத்தித்து வைத்திருந்தனர். அரண்மனையே இதனால் என்றும் ஜொலித்துக் கொண்டிருந்தது.
30-1438231647-5factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor

லண்டனில் இருந்து கதவு இறக்குமதி
லால்பாக் அரண்மனையின் நுழைவாயில் கதவுகள் லண்டனில் வடிவமைக்கப்பட்டு அங்கிருந்து கப்பல் மூலம் இந்தூரில் இருக்கும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டு நிறுவப்பட்டது.
30-1438231654-6factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor

வைரம் பதித்த காலணிகள்
கூச் பெஹர்ஸ் மகாராணி இந்திரா தேவி இத்தாலியின் பிரபல வடிவமைப்பாளர் சல்வடோர் (Salvatore Ferragamo) என்பவரிடம் நூறு ஜோடி வைரம் பதித்த காலணிகளை தயாரித்து தர கூறி வாங்கினார். சல்வடோர் (Salvatore Ferragamo) என்பவர் 20ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
30-1438231661-7factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor

சுத்தமான வெள்ளியில் பெரிய பாத்திரங்கள்
இரண்டாம் சவாய் மாதோ சிங் மகாராஜா சிறப்பாக சுத்தமான வெள்ளியில் இரண்டு பெரிய பத்திரங்கள் செய்ய கட்டளையிட்டார். அவர் இங்கிலாந்து செல்லும் போது அவருடன் கங்கை நீரை எடுத்து செல்ல இதை உருவாக்க கூறினார் என்கிறார்கள்.
30-1438231667-8factsaboutindianroyalfamiliesthatwillevenmaketherichfeelpoor