தெறி படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்

தெறி படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘தெறி’ என்ற தலைப்பை தேர்வு செய்துவிட்டார்கள். சமீபத்தில் இந்த தலைப்புடன் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கியுள்ளனர். காலோ என்ற ஸ்டண்ட் கலைஞர்கள்தான் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சியில் விஜய்யுடன் சேர்ந்து மோதியுள்ளனர்.

காலோ ஸ்டண்ட் கலைஞர்கள் ஹாலிவுட் வெளிவந்த பிரம்மாண்ட படமாக ‘மிஷன் இம்பாஷிபில்-5’ல் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் இப்படத்தில் பங்கேற்றது படத்திற்கு மேலும் பக்கபலமாக அமைந்துள்ளது என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்திற்கு சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் மேற்கொண்டு வருகிறார். மேலும், இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ராதிகா சரத்குமார், பழம் பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.