‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர்

அஜீத் நடித்து முடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் கதை கிட்டத்தட்ட பாட்ஷா பாணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

‘வேதாளம்’ படத்தில் அஜீத், கணேஷ் பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அவர் தனது தங்கையுடன் கொல்கத்தாவின் வசித்து வரும் நிலையில்,அங்கு தற்செயலாக வரும் வில்லன் கோஷ்டியினர் ‘வேதாளம்’ இங்கு எப்படி வந்தார்? என்று கூறுவதாகவும், இதன்பின்னர் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் வேதாளம்’ என்ற பெயரில் அஜீத் சென்னையில் இருப்பதாகவும், அங்கு அவர் வில்லன் கோஷ்டிகளை அழித்துவிட்டு, தாதா தொழிலே வேண்டாம் என்று தங்கையுடன் கொல்கத்தா வருவது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட பாட்ஷாவின் பாணியில் அமைந்திருக்கும் இந்த படத்தில் அஜீத்தின் தந்தையாக தம்பிராமையாவும், நண்பர்களாக லொள்ளு சபா சாமிநாதன், பால சரவணன் ஆகியோர்கள் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘வேதாளம்’ படத்தின் கதை உண்மையிலேயே பாட்ஷா பாணியில்தான் அமைந்துள்ளதா? என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.