10 கோடி கேட்கிறாராம் ஸ்ரீதேவி

‘16 வயது’ இல்லை தான். திருப்பிப் போட்டால் எந்த வயது வருமோ கிட்டத்தட்ட அந்த வயதை நெருங்கியவர் தான். ஆனால் இன்றைக்கும் அதே 16 வயதினிலே ரேஞ்சில் தான் என்னுடைய மவுசு குறையாமல் இருக்கிறது என்கிறார் ஸ்ரீதேவி.

விஜய்யின் ‘புலி’ படத்தில் ஹன்ஷிகாவுக்கு அம்மாவாக நடித்து வரும் ஸ்ரீதேவி முதலில் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. விஜய் ஹீரோ என்றதும் தான் நடிக்க சம்மதித்தார். வாய்ப்பு தேடி அலைந்தால் குடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடிப்பார்கள். தேடிப்போய் நடிக்கக் கூப்பிட்டால் அவர் கேட்கிற சம்பளத்தை தானே கொடுத்தாக வேண்டும்.

தனது சம்பளம் சுமாராக 10 கோடி என்று சொல்லும் ஸ்ரீதேவி கூடுதலாக தங்குவதற்கு 5 ஸ்டார் ஹோட்டல், வந்து போவதற்கு பிளைட் டிக்கெட்ஸ், தனது மேக்கப் மேன், டச்சப் பாய், காஸ்ட்யூம் டிசைனர், பாதுகாப்புக்கு கூடவே வரும் அரை டஜன் ஜிம் பாய்ஸ் என சம்பளம் தவிர்த்து ஸ்ரீதேவி வைக்கும் செலவே கிட்டத்தட்ட இன்னும் சில கோடிகளைத் தொட, புலிக்கு மட்டும் ஸ்ரீதேவிக்கு 18 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள்.

அவர் புலியில் அம்மா கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் தெலுங்கில் இருந்தும் கூட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. பிரபாஸ் நடிக்கப் போகும் ஒரு புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் கால்ஷீட் ரெடி என்கிறாராம் மயிலு. உண்மையிலேயே மவுசு குறையாத மயிலு தான்…