20 வயது பெண்ணாக நடிக்கும் திரிஷா

20 வயது பெண்ணாக நடிக்கும் திரிஷா

வித்தியாசமான கதையம்சம் கொண்ட ‘நாயகி’ படத்தில் திரிஷா நடிக்கிறார். இதில் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

‘நாயகி’ திரிஷா குறித்து படத்தின் இயக்குனர் கோவி கூறியதாவது:–

இந்த படத்தில் 20 வயது பெண்ணாக திரிஷா நடிக்கிறார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். இதனால் முன்பு இருந்ததை விட இளமையாக மாறி இருக்கிறார்.

அவரது வேடம் என்ன என்பதை சொல்ல முடியாது. நான் இது குறித்து சொன்ன போது திரிஷா அதை முழுமையாக புரிந்து கொண்டார். என்ன எதிர் பார்த்தேனோ அந்த பாத்திரமாகவே மாற தீர்மானித்து விட்டார்.

அவரது சிறப்பு தோற்றத்துக்காக பிரபல மேக்கப் கலைஞர், உடை அலங்கார நிபுணர்கள் மும்பையில் இருந்து வருகிறார்கள். திரிஷா பெரும்பாலும் 1980–களில் உள்ள தோற்றத்தில் வருவார். இந்த கதை 98 சதவீதம் காமெடி கலந்தது. நான் திரிஷாவின் மிகப்பெரிய ரசிகன்.

அவர்தான் எனது ஹீரோ. நான் அவரை வைத்து ஒருபடம் இயக்க ஆசைப்பட்டேன். அது நடந்திருக்கிறது. நான் கதை சொன்ன 10 நிமிடங்களில் அவர் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.