மாஸ் படம் மே 29ம் தேதி வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘மாஸ்’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ப்ரணிதா, பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மாஸான வரவேற்பை கொடுத்தார்கள். மேலும் யூடியூப்பில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

நேற்று இப்படத்தின் பாடல்களை வித்தியாசமான முறையில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு வானொலி நிலையத்திலும், பெரிய நடிகர்களை வைத்து வெளியிட்டனர்.

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இந்தப் பாடல்கள் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படத்தை மே 29ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.