3 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது புலி டிரைலர்

நாளை முதல் 3 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது புலி டிரைலர்
விஜய் நடித்துள்ள ‘புலி’ படம் அடுத்த மாதம் 17–ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இதுவரை விஜய் படங்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன தியேட்டர்களை விட அதிகமான திரை அரங்குகளில் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.‘புலி’ படத்துக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதன் டிரைலர் நாளை முதல் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. ‘புலி’ படம் ரிலீஸ் ஆகும் செப்டம்பர் 17–ந்தேதி இந்தியிலும் முதல் முறையாக ரிலீஸ் ஆகிறது. இதுபோல் தெலுங்கிலும் இதே நாளில் ‘புலி’ திரையிடப்படுகிறது. இதுதவிர கர்நாடகம், கேரளாவிலும் ‘புலி’ படம் வெளியாகிறது.

நாளை வெளியாகும் ‘புலி’ படத்தின் டிரைலரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியிடுகின்றனர். ஏற்கெனவே வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ‘புலி’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.