3 வருட இடைவெளிக்குப்பிறகு ஜெனிலியா மீண்டும் நடிக்கிறார்

3 வருட இடைவெளிக்குப்பிறகு ஜெனிலியா மீண்டும் நடிக்கிறார்

பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருந்த இவர், 2012–ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நடிப்பதை தவிர்த்தார்.

சமீபத்தில் ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னரும் தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்தார். அதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்து ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக ஹாங்காங் செல்கிறார்.

இதற்கிடையே இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது குறித்து ஜெனிலியா டுவிட்டரில், ‘3 வருடங்களுக்குப் பிறகு சூட்டிங்கில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் நடித்த விளம்பர படப்பிடிப்பில் அனுபவித்து நடித்தேன். அடுத்து ஹாங்காங் செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். ஜெனிலியா மீண்டும் நடிப்பதற்கு அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.