சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 36-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 36-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 35 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசளித்து, பாராட்டி கௌரவித்து வருகிறார்.

ணவர்களை ஊக்கப்படுத்த தனது 100-வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். கடந்த 36 ஆண்டுகளாக தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 36-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை சர்.பி.டி.தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ. 2 லட்சத்துக்கு 30 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான ‘தாய் தமிழ் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்தற்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து  பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா இந்நிகழ்ச்சியை இறை வணக்கம் பாடி தொடங்கி வைத்தார். நடிகர் சூர்யாவும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.