4–வது முறையாக ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் கமல்–அஜித் படங்கள்

4–வது முறையாக ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் கமல்–அஜித் படங்கள்
கமலின் ‘தூங்காவனம்’ தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கி இருக்கிறார்.

கமல் படம் வெளியாகும் அதே நாளில் அஜித், சுருதிஹாசன் நடித்துள்ள ‘வேதாளம்’ படமும் ரிலீஸ் ஆகிறது. லட்சுமிமேனன், சூரி, தம்பி ராமையா நடித்திருக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார்.

கமல் படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதுவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. என்றாலும் கமல், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது புதிது அல்ல. ஏற்கனவே 3 முறை இவர்கள் படம் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன.

1994 நம்பவர் 2–ல் கமலின் ‘நம்மவர்’ அஜித் நடித்த ‘பவித்ரா’ ஆகிய படங்கள் வெளியாகின. 2000–வது ஆண்டு பிப்ரவரி 18–ந்தேதி கமலின் ‘ஹேராம்’ அஜித்தின் ‘முகவரி’ படங்கள் திரைக்கு வந்தன.

2002–ம் ஆண்டு பொங்கல் தினமான ஜனவரி 14–ந்தேதி கமல் நடித்த ‘பம்மல் கே.சம்பந்தம்’, அஜித் நடித்த ‘ரெட்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இப்போது 4–வது முறையாக கமல்–அஜித் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வர இருக்கின்றன.