45 வயதில் திருமணம் செய்து கொள்ளும் தபு

45 வயதில் திருமணம் செய்து கொள்ளும் தபு

தமிழில் ‘காதல் தேசம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தபு. ‘இருவர்’, ‘தாயின் மணிக்கொடி’ படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

தபுவுக்கு 45 வயதாகிறது. இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

தபு பிறந்த சில நாட்களிலேயே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இது குறித்து தபு கூறும்போது, என் தந்தையை நான் பார்த்தது இல்லை. அவரை சந்திக்க விரும்பியதும் இல்லை என்பதால் எனக்கு தந்தையாகவும், என் தாய் இருக்கிறார் என்றார்.

தபுவுக்கு திருமண வயது வந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்தனர். ஆனால் தபு மறுத்துவிட்டார். திருமணமே வேண்டாம் என்று கூறி விட்டார். தனிமையில் வாழ்ந்த அவருக்கு தற்போது திருமண ஆசை ஏற்பட்டு உள்ளது.

மும்பை தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடப்பதாக கூறப்படுகிறது.