சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனுக்கு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனுக்கு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரஜினிமுருகன்’. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரீலீசாவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இப்படம் வெளியாவதற்கு பலமுறை தேதிகள் அறிவித்தும் படம் வெளிவரவில்லை.

இந்நிலையில், தற்போது ‘ரஜினி முருகன்’ படம் வருகிற டிசம்பர் 11-ந் தேதி வெளியாகவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இப்படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

பண பட்டுவாடா பிரச்சினைகளால்தான் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது அந்த பிரச்சினைகளை சரிசெய்துவிட்டதாகவும், அதனால், படத்தை டிசம்பர் 11-ந் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர் அறிமுகமான முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.