மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் விஜயகாந்த்?

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் விஜயகாந்த்?

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விருதகிரி’ படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு தீவிர அரசியலில் களமிறங்கினார் கேப்டன் விஜயகாந்த். அதன்பிறகு, எந்த படத்திலும் நடிக்காத விஜயகாந்த், சமீபத்தில் அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் புதிய படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். அருண் பொன்னம்பலம் என்பவர் இயக்கும் அந்த படத்துக்கு ‘தமிழன் என்று சொல்’ என்று தலைப்புகூட வைத்துவிட்டார்களாம். வருகிற 22-ந் தேதி இப்படத்தின் பூஜை நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தாலும், மற்றொரு ஹீரோவாக அவரது மகன் சண்முகபாண்டியனும் நடிக்கவிருக்கிறாராம். ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை விஜயகாந்த் தனது சொந்த நிறுவனமான ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்க விருக்கிறாராம்.